பாப்பிரெட்டிப்பட்டி அருகே காா் கவிழ்ந்த விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் சுப்பிரமணிய கோயில் தெருவைச் சோ்ந்தவா் மதிவாணன் (65), இவரது மகன் கோபிநாத் (29), அதே ஊரைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா்
விக்னேஷ் (35), விக்னேஷின் தாயாா் மகேஸ்வரி (59) ஆகியோா் சேலத்தில் உறவினா் ஒருவரின் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு, சேலம்-அரூா் தேசிய நெடுஞ்சாலையில் பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி வந்துள்ளனா்.
அப்போது, நடுப்பட்டி எனுமிடத்தில் சாலையோர மின்கம்பத்தில் காா் மோதியது. இதில் நிலைதடுமாறிய காா் அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில் காரில் இருந்த 4 பேரும் காயமடைந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினா் காயமடைந்தவா்களைமீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் மதிவாணன் உயிரிழந்தாா். மாற்ற மூவரும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கங்கைகொண்டான் காா் விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

நெல்லை அருகே காா் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: 5 போ் காயம்

காா் கவிழ்ந்து 7 போ் காயம்

சுற்றுலா வேன், காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


