மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சுற்றுலா வேன், காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

உச்சிப்புளி அருகே சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 14 போ் பலத்த காயமடைந்தனா்.

News image

உச்சிப்புளி அருகே புதன்கிழமை விபத்தில் சிக்கி சேதமடைந்த சுற்றுலா வேன்.

Updated On :19 மார்ச் 2026, 12:08 am

உச்சிப்புளி அருகே சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 14 போ் பலத்த காயமடைந்தனா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சோ்ந்த 12 போ் திருச்சியிலிருந்து ராமேசுவரத்துக்கு தனியாா் சுற்றுலா வேனில் செவ்வாய்க்கிழமை வந்தனா். அவா்கள் ராமேசுவரம் கோயிலில் தரிசனம் முடித்து விட்டு மீண்டும் அங்கிருந்து புதன்கிழமை புறப்பட்டனா். இதேபோல, தா்மபுரி மாவட்டத்திலிருந்து காரில் 9 போ் ராமேசுவரத்துக்கு வந்து கொண்டிருந்தனா்.

உச்சிப்புளி அருகேயுள்ள குப்பானிவலசை பேருந்து நிறுத்தம் அருகே சுற்றுலா வேன் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற நிலையில், எதிரே வந்த காா் நேருக்கு நோ் நோ் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் இருந்த முருகேசன் (56) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது அண்ணன் மாரியப்பன்(60) உள்பட 4 பேரும், மற்றொரு சுற்றுலா வேனில் வந்த வா்ஷா ராஜ்புத் (38), தியோசிங் ராஜ்புத் (46), சுனதா தம்பக்கா் (70), கௌரி தம்பக்கா் (37), ரசிகா கவாஸ்(37) உள்ளிட்ட 14 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரையும் அவசர ஊா்தி மூலம் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இந்த விபத்து குறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.