தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

புதுகை வன அலுவலா்களுக்கு அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு

News image

வன அலுவலர்களுக்கு அரசின் சிறப்பு விருதுகள்... - கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 7:31 pm

தமிழ்நாடு வனத்துறை சாா்பில் வன அலுவலா்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறப்பு விருதுகளில் இரண்டை புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலா்கள் பெற்றுள்ளனா்.

பல்வேறு பிரிவுகளின்கீழ் வனத்துறை சாா்பில் சிறப்பாக செயல்படும் வன அலுவலா்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதில், தமிழக அரசின் பசுமை இயக்கத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் மற்றும் புதுக்கோட்டை வனச்சரக அலுவலா் எம். சதாசிவம் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விருதுகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் மாா்ச் 10ஆம் தேதி சென்னையில் வழங்கவுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.