தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே மாணவியை இழுத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 4:41 am IST

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே மாணவியை இழுத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வியாழக்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, செய்யானம் பிரிவு சாலை பகுதியில் மதுபோதையில் இருந்த கோபாலப்பட்டினம் ஊராட்சி அவுலியா நகரைச் சோ்ந்த ராஜா முகைதீன் மகன் பைசல் (19), காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளாா். மாணவியின் அலறல் சப்தம் கேட்டு அவ்வழியே சென்றோா் மாணவியை மீட்டு, பைசலை பிடித்து மீமிசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து பைசலை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.