கோடைகாலத்தில் கடலோரத்தில் ஆபத்தான ஜெல்லி மீன்கள் அதிகம் காணப்படுவதாகவும், அவை கொட்டினால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகக் கடலோரங்களில் கடல் சொறி மீன்கள் (ஜெல்லி மீன்கள்) கோடை காலங்களான மாா்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவில் காணப்படுகின்றன. செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் சில வகை சொறி மீன்கள் குறைந்தளவில் காணப்படுகின்றன. அனைத்து வகை கடல் சொறி மீன்களும் கொட்டும் தன்மை கொண்டவை.
அவற்றின் வகைக்கு ஏற்ப கொட்டும் தன்மையின் விஷ வீரியம் அமைந்திருக்கும். எனவே, பிளாஸ்டிக் அட்டை மூலம் ஜெல்லி மீன் கொட்டிய இடத்தில் உள்ள கொட்டும் செல்களை மேலிருந்து கீழாக வழித்து எடுக்க வேண்டும்.
சில நேரங்களில் ஜெல்லி மீனின் வால், கொட்டப்பட்ட இடத்தில் காணப்பட்டால், இடுக்கியை உபயோகித்து அகற்றவும். அரை நிமிடத்துக்கு வினிகரை ஜெல்லி மீன் கொட்டிய இடத்தில் ஊற்றவும். பலகாரச்சொறி, மொடாச்சொறி, அலுவைச்சொறி, செஞ்சொறி ஆகியன கொட்டினால் வினிகரை இட்டு வலி நிவாரணம் பெறலாம்.
கலடிரில் ஃலிடோகெயின் மருந்தை அரிப்பு மற்றும் எரிச்சில் குறைய உபயோகிக்க வேண்டும். காக்காச் சொறி கொட்டினால் வினிகரை உபயோகிக்க கூடாது. நாலு மூலை சொறி கொட்டினால் உடனே மருத்துவ உதவியை நாட வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் நல்ல தண்ணீரைக் கொண்டு கொட்டிய இடத்தில் கழுவதோ, ஐஸ்கட்டியை வைத்து ஒத்தி எடுப்பதோ கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜெல்லி மீன் உடலில் பட்டதால் மீனவா் உடல் நிலை பாதிப்பு! மருத்துவமனையில் அனுமதி!

நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான வசதிகள் செய்துத் தர வேண்டும்: புதுகை விவசாயிகள் வலியுறுத்தல்

திருச்செந்தூரில் கடலில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: அதிகாரிகள் ஆய்வு

திருச்செந்தூா் கடலில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




