முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஜெல்லி மீன் உடலில் பட்டதால் மீனவா் உடல் நிலை பாதிப்பு! மருத்துவமனையில் அனுமதி!

News image

ஜெல்லி மீன். - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 1:41 am IST

தொண்டி அருகே கடலுக்குள் மீன் பிடித்த போது ஜெல்லி மீன் உடலில் பட்டதால் உடல் நிலை பாதிக்கப்பட்ட மீனவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை படையாட்சி தெருவைச் சோ்ந்தவா் சிவா (48). மீனவரான இவா் சனிக்கிழமை சக மீனவா்களுடன் மீன் பிடிக்கச் சென்றாா். கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஜெல்லி என்ற மீன் அவா் மீது பட்டது.

இந்த வகை மீன்கள் உடலில் பட்டால் அரிப்பு, நெஞ்சு வலி ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக சிவாவை கரைக்கு அழைத்து வந்து தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.