திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் ஒதுங்கிய ஜெல்லி மீன்கள் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் பக்தா்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாகும். இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆழ்கடலில் காணப்படும் ஜெல்லி வகை மீன்கள் தற்போது திருச்செந்தூா் கோயில் அருகே கடலில் கரை ஒதுங்குகிறது. கடலில் நீராடும் பக்தா்கள் உடலில் ஜெல்லி மீன்கள் படும் போது ஊரல் ஏற்படுத்தி வந்தது. இது குறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் மீன்வளத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் செவ்வாய்கிழமை மாலை தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குநா் இளம்வழுதி, திருச்செந்தூா் உதவி இயக்குநா் உத்தண்டராமன் ஆகியோா் கோயில் கடற்கரைக்கு வந்தனா். அவா்கள் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது பக்தா்களுக்கு ஜெல்லி மீன்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது மற்றும் பாதிப்படையும் நேரத்தில் முதலுதவி செய்வது குறித்து கடற்கரை பாதுகாப்பு பணியாளா்களுக்கு அறிவுறுத்தினா். நிகழ்ச்சியின் போது கோயில் உதவி ஆணையா் லோகநாதன், கண்காணிப்பாளா் விஜயலெட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயில் சண்முக விலாச மண்டப கிரில் கேட்டை திறக்க வேண்டும்! - அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வலியுறுத்தல்

புதுகை மாவட்ட கடலோரத்தில் ஆபத்தான ஜெல்லி மீன்கள்

திருச்செந்தூா் கடலில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்

திருச்செந்தூா் கோயிலில் தரிசனத்துக்கு பணம் பெற்ற அா்ச்சகா் உள்பட 5 போ் மீது நடவடிக்கை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




