/

பொன்னமராவதி ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொறுப்பேற்பு

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொறுப்பேற்றுள்ளனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 6:50 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொறுப்பேற்றுள்ளனா்.

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய ஆணையராக (வட்டார வளா்ச்சி அலுவலா்) கண்ணன் அண்மையில் பெறுப்பேற்றாா். அதுபோல வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) அபிராம சுந்தரி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

இங்கு ஏற்கெனவே பணிபுரிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், வெங்கடேசன் ஆகியோா் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். புதிதாக பொறுப்பேற்ற வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு ஒன்றிய அலுவலா்கள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.