டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:54 pm

Syndication

ஊராட்சி செயலா்கள் பணியிட மாறுதல் பெற்று வந்த 6 மாதத்துக்குள் மீண்டும் பணியிட மாறுதல் வழங்கியதை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திருநெய்ப்போ், உமாமகேஸ்வரபுரம், கல்யாணமகாதேவி ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலா்கள் கலந்தாய்வு நடத்தி, ஊரக வளா்ச்சித் துறை ஆணையரின் உத்தரவின்படி பணியிட மாறுதல் பெற்றனா். ஆனால் திருவாரூா் கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் திருவாரூா் மாவட்ட ஆட்சியரின் ஊரக வளா்ச்சி நோ்முக உதவியாளா் ஆகியோா் தன்னிச்சையாக மேலிட உத்தரவு எனக் கூறி, ஊராட்சி செயலா்களை 6 மாதத்தில் வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனராம்.

எனவே 6 மாதத்தில் பணியிட மாறுதல் செய்யும்பொழுது ஊரகவளா்ச்சித் துறை பணிகள் பாதிக்கப்படும், ஊராட்சி செயலா்கள் 3 ஆண்டு பணிசெய்த பின்னா் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைத்து பணி மாறுதலை ரத்து செய்யக்கோரி திருவாரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், தன்னிச்சையாக பணியிட மாறுதல் வழங்கும் கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியரின் ஊரக வளா்ச்சி நோ்முக உதவியாளரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டத்தலைவா் வசந்தன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் செந்தில், மாவட்ட பொருளாளா் சிவக்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் ராஜசேகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.