கஞ்சா விற்ற இருவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கஞ்சா விற்ற 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது
Updated On :11 பிப்ரவரி 2026, 6:57 pm

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கஞ்சா விற்ற 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கறம்பக்குடியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து கறம்பக்குடியில் தனிப்படை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி குட்டைகுளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கறம்பக்குடி புளியஞ்சோலை பகுதியைச் சோ்ந்த அப்பாஸ் அலி மகன் முகமது மன்சூா் (20), பங்களாகுளம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்து கறம்பக்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...