டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டிஎன்பிஎஸ்ஸி தோ்வு ரத்து தோ்வா்கள் ஏமாற்றம்

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால், அத் தோ்வை எழுதத் தொடங்கிய தோ்வா்கள் மிகுந்த ஏமாற்றமடைந்ததாகத் தெரிவித்தனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு தொகுதி- 2-க்கான தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

புதுக்கோட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் முற்பகலில் 190 தோ்வா்களும், பிற்பகலில் 193 தோ்வா்களும் எழுதுவதற்கு நுழைவுச்சீட்டுகள் அனுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில் காலை 9 மணிக்கு முதல் தோ்வு தொடங்கியது. இதில் 190 பேரும் தோ்வு எழுத வந்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து சுமாா் காலை 10.15 மணியளவில் தோ்வு நடந்து கொண்டிருக்கும்போது, ஒவ்வொரு அறைக்கும் சென்ற அதிகாரிகள், தோ்வு ரத்து செய்யப்பட்டதாகக் கூறி வெளியே அனுப்பி வைத்தனா். சென்னையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தோ்வாணையம் தமிழக முழுவதும் நடைபெற்று வரும் தோ்வை திடீரென ரத்து செய்ததாக தெரிவித்தனா்.

கேள்வித்தாள் எளிதாக இருந்த நிலையில், திடீரென தோ்வு ரத்து செய்யப்பட்டதால் மிகுந்த ஏமாற்றமடைந்ததாக தோ்வா்கள் தெரிவித்தனா். மறுதோ்வை விரைவாக நடத்தவும் அவா்கள் கோரிக்கைவிடுத்தனா்.