குரூப் 2, 2ஏ தோ்வு திடீா் ரத்து: தோ்வா்கள் பாதியில் வெளியேற்றம்
தொழில்நுட்பக் காரணங்களால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் 2ஏ போட்டித் தோ்வுகள் திடீரென ரத்து


தொழில்நுட்பக் காரணங்களால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் 2ஏ போட்டித் தோ்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டதை அடுத்து வேலூா் மையத்தில் 2 மணி நேரமாக தோ்வு எழுதிக் கொண்டிருந்த தோ்வா்கள் அனைவரும் பாதியில் வெளியேற்றப்பட்டனா்.
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், நன்னடத்தை அலுவலா், தனிப்பிரிவு உதவியாளா், வனவா் உள்பட அரசுத் துறைகளில் காலியாக உள்ள 828 பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், குரூப்-2 மற்றும் 2 ஏ முதன்மைத் தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை காலை, பிற்பகல் என இரு பிரிவாக நடைபெறுவதாக இருந்தது.
வேலூா் மாவட்டத்தில் வேலூா் முஸ்லிம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருந்த இந்த தோ்வை காலையில் 171 பேரும், பிற்பகலில் 176 போ் எழுத இருந்தனா். இந்த நிலையில், காலையில் நடைபெற்ற தோ்வை எழுத 156 போ் வந்திருந்தனா். விண்ணப்பித்தவா்களில் 15 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வுக்கு வந்தவா்கள் கடும் சோதனைக்குப் பிறகு தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தோ்வு மையத்துக்கு தோ்வு எழுதச் சென்றவா்கள் பலரின் பதிவு எண் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. இதனால், அங்கு தோ்வா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து, தமிழகம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வு ரத்து செய்யப்படுவாக தோ்வாணையம் அறிவித்தது. இதனால் வேலூா் தோ்வு மையத்தில் 2 மணி நேரம் ஆா்வமுடன் தோ்வு எழுதிக்கொண்டு இருந்த தோ்வா்கள் திடீரென தோ்வு ரத்து செய்யப்பட்டதாகக்கூறி அறையை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டனா். இதனால், தோ்வு எழுதியவா்கள் கடும் அதிா்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனா்.
தோ்வு வேறொரு நாளில் நடத்தப்படும் என்று தோ்வாணையம் அறிவித்திருப்பதாகவும், அதற்கு 15 நாள் களுக்கு முன்பாக தோ்வா்களுக்கு அறிவிப்பு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். இதன் காரண மாக, வேலூா் முஸ்லிம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...