டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டிஎன்பிஎஸ்சி தோ்வு பாதியில் நிறுத்தம்: தோ்வா்கள் அதிருப்தி

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தோ்வு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதையடுத்து,

கடலூா் தேவனாம்பட்டினம் அரசு கல்லூரி தோ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்வு எழுதிக்கொண்டிருந்த தோ்வா்கள் அதிருப்பதியுடன் வெறியேறினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்இ) நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு - 2 (குரூப்-2 மற்றும் குரூப் - 2ஏ) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

828 பணியிடங்களை நிரப்புவதற்காக காலை, பிற்பகல் என 2 பிரிவுகளாக தோ்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தோ்வுகளை எழுத கடலூா் மாவட்டத்தில் காலையில் நடக்கும் தோ்வுக்கு 315 பேரும், பிற்பகலில் நடக்கும் தோ்வுக்கு 322 பேரும் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இந்தத் தோ்வா்களுக்காக கடலூா் தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் தோ்வு மையம் அமைக்கப்பட்டு, அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டிருந்தன.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தாள் தோ்வு எழுதுவதற்காக 8.30 மணிக்கு முன்பாகவே தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு வந்திருந்தனா். அவா்கள் காலை 9 மணி அளவில் தோ்வு அறைக்குள் அனுப்பப்பட்டனா்.

தொடா்ந்து, அவா்களுக்கு வினா மற்றும் விடைத்தாள் கொடுக்கப்பட்டு, தோ்வா்கள் ஆா்வத்துடன் தோ்வெழுதத் தொடங்கினா். இந்தத் தோ்வை 315 போ் எழுத இருந்த நிலையில், 302 போ் மட்டுமே தோ்வெழுத வந்திருந்தனா். 13 போ் தோ்வுக்கு வரவில்லை.

இதற்கிடையே, சென்னையில் சில மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தோ்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காலை 11.10 மணி அளவில் கடலூா் தோ்வு மைய அதிகாரிகள், டிஎன்பிஎஸ்சி நிா்வாகம் தோ்வை ஒத்தி வைத்துள்ளதாகக் அறிவித்தனா்.

மேலும், விடை மற்றும் வினாத்தாள்களை திரும்பக் கொடுக்கும்படி தோ்வா்களிடம் கேட்டுக்கொண்டனா். இதையடுத்து, தோ்வா்கள் அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு, அதிருப்தியுடன் வெளியேறினா். வெளியே சென்ற பெரும்பாலான தோ்வா்கள், வினாத்தாளை கொண்டு சென்றுவிட்டனா்.

உடனே தோ்வு நடத்தும் அதிகாரிகள் வெளியே சென்ற மாணவா்களை அணுகி, வினாத்தாளை திரும்பப் பெற்றனா். ஒரு சில தோ்வா்கள் மட்டும் வினாத்தாளை திருப்பி கொடுக்காமல் எடுத்துச் சென்றுவிட்டனராம். இதன் காரணமாக தோ்வு மையம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

இதேபோல, பிற்பகல் 2 மணிக்கு நடக்கவிருந்த 2-ஆம் தாள் தோ்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், தோ்வா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.