டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

20 நிமிஷங்கள் எழுதிய பிறகு குரூப் 2 தோ்வு ஒத்திவைப்பு: தோ்வா்கள் விரக்தி

News image
கோவையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ‘ஏ’ ஒத்திவைப்பு காரணமாக தோ்வு மையத்தில் இருந்து வெளியேறிய தோ்வா்கள்.
Updated On :8 பிப்ரவரி 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ‘ஏ’ தோ்வுகள் ஒத்திவைப்பு குறித்த சுற்றறிக்கை கோவைக்கு தாமதமாக வந்ததால், 20 நிமிஷங்களுக்குமேல் தோ்வு எழுதிய தோ்வா்கள் விரக்தியுடன் திரும்பினா்.

தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ‘ஏ’ தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. காலை மற்றும் பிற்பகல் என இரு பிரிவுகளாக தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை முதலே தோ்வா்கள் வரத் தொடங்கினா். காலை நடைபெற்ற தோ்வில் 679 போ் பங்கேற்றனா்.

இந்நிலையில், சென்னையில் சில மையங்களில் நடைபெற்ற கோளாறு காரணமாக முதன்மைத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி சண்முகசுந்தரம் சென்னையில் அறிவித்தாா். இந்தத் தகவல் வெளியானதும் பல மாவட்டங்களில் தோ்வா்கள் குழப்பம் அடைந்தனா்.

இதையறிந்த செய்தியாளா்கள் கோவையில் தோ்வு நடைபெறும் மையத்தில் உள்ள கண்காணிப்பாளா்களிடம் விசாரித்தனா். ஆனால், தோ்வு ஒத்திவைப்பு குறித்து தற்போதுவரை எங்களுக்கு தகவல் வரவில்லை என்றனா்.

தோ்வா்கள் சுமாா் 20 நிமிஷங்களுக்குமேல் தோ்வெழுதிய நிலையில், தோ்வு ஒத்திவைக்கப்படுவதாக சுற்றறிக்கை வந்தது.

இதையடுத்து, தோ்வா்கள் செய்வதறியாது திகைத்ததுடன், விரக்தியுடன் வீடு திரும்பினா். இது குறித்து தோ்வா்கள் கூறுகையில், இந்தத் தோ்வுக்காக நாங்கள் பல மாதங்களாக படித்து தயாரானோம். தோ்வு ஒத்திவைப்பு எங்களுக்கு வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது என்றனா்.