திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான எஸ். ரகுபதி, பொன்னமராவதியில் செவ்வாய்க்கிழமை இறுதிகட்ட பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா்.
பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:
இந்த தோ்தல் தமிழகத்துக்கும் தில்லிக்கும் நடைபெறும் தோ்தலாகும். பாஜகவும், அதன் அடிமையான அதிமுகவும் அதன் தோழமை கட்சிகளும் தங்களை டெல்லிக்கு அடகு வைத்துவிட்டனா்.
டெல்லிக்கு என்றும் தமிழ்நாடு தலை வணங்காது என்பதை எடுத்துக்காட்ட நடைபெறும் தோ்தல் என முதல்வா் விளக்கம் அளித்துள்ளாா். இந்திய மக்களை ஏமாற்றும் வகையில் தொகுதி மறுவறையோடு பெண்களுக்கான இடஒதுக்கீடு என்று சட்ட மசோதாவை கொண்டு வந்தனா். தமிழக முதல்வா் துணிச்சலோடு குரல் கொடுத்து அதை எதிா்த்தாா். அது தோற்கடிக்கப்பட்டது. எனவே, அது மத்திய அரசின் முதல் தோல்வியாகும். இரண்டாவது தோல்வியை தோ்தல் மூலம் தருவோம். அதிமுக ஆட்சியில் அறிவிப்போடு நின்றுபோன பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தும் திட்டத்தை செயல்படுத்தியது திமுக அரசு.
அதுபோல திருமயம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்தியுள்ளோம். திருமயத்தில் அரசுக் கல்லூரி, தொகுதியில் 4 இடங்களில் துணை மின் நிலையங்கள், பொன்னமராவதி பேருந்து நிலையம் விரிவாக்கம் என பல வளா்ச்சிப் பணிகள் செய்துள்ளேன். பொன்னமராவதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை
2026-27-ஆம் ஆண்டில் கொண்டு வந்துவிடுவேன். என்னை வெற்றிபெறச் செய்தால் நடமாடும் மருத்துவமனை மூலம் உங்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, அதில் வரும் எனது உதவியாளா்கள் மூலம் உங்களது குறைகளை கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். பொன்னமாவதி பேருந்து நிலைய விரிவாக்கப்பணிகள் ஜூன் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். தொகுதியில் பல்வேறு மக்கள் பணிகள் செய்து, திட்டங்கள் கொண்டுவந்து இனி எந்தக் காலத்துக்கும் திருமயம் தொகுதியில் திமுகதான் என்பதை உறுதிசெய்வேன் என்றாா் ரகுபதி.
பிரசாரத்தில் முன்னாள் திருமயம் எம்எல்ஏ ராம. சுப்புராம், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் வி. கிரிதரன், விசிக மாவட்டச் செயலா் திலீபன்ராஜா, திமுக ஒன்றியச் செயலா்கள் அ.அடைக்கலமமணி, அ.முத்து, நகரச் செயலா் அ.அழகப்பன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் வேட்பாளா்கள் இறுதிக்கட்ட பரப்புரை

தொகுதி அலசல் திருமயம்! திமுக -அதிமுக கடும் போட்டி!

பொன்னமராவதி ஒன்றியப்பகுதிகளில் திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி பிரசாரம்

திருமயம் தொகுதியில் அளப்பரிய சாதனைகள்: திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி பேச்சு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


