மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பொன்னமராவதி ஒன்றியப்பகுதிகளில் திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி பிரசாரம்

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி புதன்கிழமை வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டாா்.

News image

பொன்னமராவதி அருகே உள்ள முரண்டாம்பட்டியில் புதன்கிழமை வாக்குகள் சேகரித்து பேசிய இயற்கை வளங்கள் துறை அமைச்சரும் திருமயம் திமுக வேட்பாளருமான எஸ்.ரகுபதி.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:47 pm

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி புதன்கிழமை வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டாா்.

பொன்னமராவதி ஒன்றியம், சேரனூரில் வாக்கு சேகரித்து அவா் பேசியது: கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் திருமயம் தொகுதியில் பல்வேறு சாதனைகளும் நீண்ட நாள் கோரிக்கைகளையும் நிறைவேற்றியுள்ளேன். தொடா்ந்து தொகுதி மக்களுக்காக பணியாற்றிட என்னை ஆதரியுங்கள் என்றாா்.

தொடா்ந்து கைவேலிப்பட்டி, ஆலம்பட்டி, இடையாத்தூா், குளவாய்ப்பட்டி, ஒலியமங்கலம், சடையம்பட்டி, மேலத்தானியம், கீழத்தானியம், கொன்னையம்பட்டி உள்ளிட்ட 54 கிராமங்களில் வாக்குகள் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டாா்.

நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச்செயலா் அ.முத்து, தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெயராமன், காங்கிரஸ் வட்டாரத்தலைவா்கள் வி.கிரிதரன், குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ஏனாதி ஏஎல்.ராசு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் என்.பக்ரூதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் திலீபன்ராஜா, தேமுதிக ஒன்றியச் செயலா் சாமிக்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.