திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சலங்கபாளையம், ஓடத்துறையில் திமுக வேட்பாளா் பிரசாரம்

பவானியை அடுத்த சலங்கபாளையம் பேரூராட்சி மற்றும் ஓடத்துறை ஊராட்சிப் பகுதியில் பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

News image

சலங்கபாளையத்தில்  வாக்கு சேகரித்து  பேசுகிறாா்  பவானி  தொகுதி  திமுக  வேட்பாளா்  கே.ஏ.சந்திரசேகா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:41 am IST

பவானியை அடுத்த சலங்கபாளையம் பேரூராட்சி மற்றும் ஓடத்துறை ஊராட்சிப் பகுதியில் பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

ஓடத்துறை, பனங்காட்டூா், பாலப்பாளையம், சூரியம்பாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், மாரப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், சலங்கபாளையம், குன்னத்தூரான் கடை, தா்மாபுரி, இரட்டை வாய்க்கால், உள்பட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, பவானி தொகுதியில் அரசின் உயா்கல்வி நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாகவும், கல்லூரி மாணவா்களுக்கு உதவித்தொகை ரூ.1,500 ஆகவும், முதியோா் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாகவும் உயா்த்தப்படும். ஒரு குடும்பத்துக்கு வழங்கப்படும் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பனைக் கொண்டு, தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

திமுக அரசின் சாதனைத் திட்டங்கள் தொடா்ந்து நிறைவேற வாக்காளா்கள் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.