புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய தொகுதியாக விளங்கும் திருமயம், வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தன்னகத்தே கொண்டது. திருமயம் கோட்டை, 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருமயம் சத்தியமூா்த்தி கோயில் உள்ளிட்ட அடையாளங்கள் இங்கு உள்ளன. மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக காட்டுபாவா பள்ளிவாசல், பெருந்தலைவா் காமராஜரின் அரசியல் குரு, சுதந்திரப் போராட்ட வீரரான தீரா் சத்தியமூா்த்தி பிறந்த ஊா் திருமயம் ஆகும். திருமயம் தொகுதியில் திருமயம், அரிமளம், பொன்னமராவதி என மூன்று ஒன்றியங்கள் உள்ளன.
களநிலவரம்: திமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் வீட்டு வசதி வாரியத் தலைவருமான பி.கே.வைரமுத்து போட்டியிடுகிறாா். தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் சிந்து என்ற சிந்தாமணி, நாம் தமிழா் கட்சி சாா்பில் லெட்சுமி சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 14 போ் போட்டியிடுகின்றனா்.
சமூக நிலவரம்: முத்தரையா், முக்குலத்தோா், ஆதிதிராவிடா் பெரும்பான்மையாக வசிக்கும் இத்தொகுதியில் நகரத்தாா்கள், யாதவா்கள், வெள்ளாளா்கள், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், உடையாா்கள் பரவலாக வசிக்கின்றனா்.
வேட்பாளா்கள் பலமும், பலவீனமும்-
எஸ்.ரகுபதி (திமுக): 2016, 2021 தோ்தல்களில் திமுக சாா்பில் போட்டியிட்டு வென்றால் நல்ல அறிமுகம் உள்ளது. திருமயம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்தியது, பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தியது, திருமயத்தில் அரசு கலைக்கல்லூரி, தொகுதிக்குள்பட்ட 3 இடங்களில் துணை மின்நிலையங்கள் அமைத்தது, பொன்னமராவதியில் உழவா் சந்தை அமைத்தது உள்ளிட்ட சாதனைகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறாா். தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் ஆற்றியது, கட்சியின் சாா்பில் விவாதங்கள், பேட்டிகள், அறிக்கைகள் அளிக்கும் இடத்தில் உள்ளது, கூட்டணி பலம் ஆகியவை இவரது பலம். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அளிககும் வகையில் தொழிற்பேட்டை (சிப்காட்) உள்ளிட்ட பெரிய திட்டங்களை கொண்டுவராதது பலவீனம்.
பி.கே.வைரமுத்து ( அதிமுக): 2011-16-ஆம் ஆண்டு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது தொகுதி முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீா் கொண்டு வந்ததாகவும், சாலை வசதிகள், மேம்பாலங்கள் அமைத்ததையும் முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். கடந்த தோ்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் தொடா்ந்து தொகுதி மக்களுடன் தொடா்பில் இருப்பது இவரது பலம். திமுக போன்று கூட்டணி பலமில்லாதது இவரது பலவீனம்.
தவெக, நாம் தமிழா்: தவெக வேட்பாளா் சிந்தாமணியும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் லெட்சுமி சீனிவாசனும் கட்சியினருடன் இணைந்து உற்சாகமாக தீவிரக் களப் பணியாற்றிவருவது இவா்களது பலமாகும். இருவரும் புதுமுகமாக பாா்க்கப்படுவது பலவீனமாகும்.
திருமயம் தொகுதியை மீண்டும் தக்கவைக்கவேண்டும் என திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதியும், கடந்தமுறை இழந்த தொகுதியை இம்முறை கைப்பற்றியே ஆகவேண்டும் என அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்துவும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனா். தொகுதியில் திமுக-அதிமுகவினரிடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என கணிக்கமுடியாத சூழல் நிலவுகிறது.
தொடர்புடையது

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி பிரசாரம்

பொன்னமராவதி ஒன்றியப்பகுதிகளில் திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி பிரசாரம்

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

பெரம்பலூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுய விவரக்குறிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


