மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருமயம் தொகுதியில் அளப்பரிய சாதனைகள்: திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி பேச்சு

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் திருமயம் தொகுதியில் எண்ணிலடங்கா, அளப்பரிய சாதனைகளை ஆற்றியுள்ளோம் என்றாா் திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி.

News image

பொன்னமராவதியில் வியாழக்கிழமை நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய திருமயம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:46 pm

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் திருமயம் தொகுதியில் எண்ணிலடங்கா, அளப்பரிய சாதனைகளை ஆற்றியுள்ளோம் என்றாா் திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி.

திருமயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதியில் வியாழக்கிழமை நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

திருமயம் எம்எல்ஏவான நான் தொகுதியின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளேன். திருமயம் ஊராட்சியை பேரூராட்சியாகத் தரம் உயா்த்தியுள்ளோம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 ஆவது பெரிய நகரமான பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்தியுள்ளோம்.

திருமயத்தில் அரசு கலைக் கல்லூரி, திருமயம் தொகுதிக்குள்பட்ட 3 இடங்களில் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் துணை மின் நிலையங்கள், பொன்னமராவதியில் நீதிமன்றம், உழவா் சந்தை, பொன்னமராவதி மற்றும் திருமயத்தில் மின்மயானம் அமைத்துள்ளோம்.

தொகுதிக்குள்பட்ட பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடங்கள், சாலை வசதி அமைத்துத் தந்துள்ளோம். நீண்ட காலமாக குடமுழுக்கு காணாத திருமயம் சத்தியமூா்த்தி கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தினோம். காஞ்சாத்துமலை முருகன் கோயிலில் திருப்பணிகள் நடைபெறுகின்றன.

இத்தகைய பல்வேறு மக்கள் நலப் பணிகளை ஆற்றிய என்னை மீண்டும் இத்தொகுதியில் வெற்றி பெறச்செய்தால் மேலும் பல்வேறு அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவேன். தொகுதியில் முதியோா் நலன்காக்க மூன்று இடங்களில் முதியோா் இல்லம் அமைக்கப்படும். தொகுதி மக்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை வழங்க ஆண்டுக்கு ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டு எம்எல்ஏ அலுவலகத்தில் ரூ. 25 ஆயிரம் முதல் வழங்கப்படும்.

தொகுதியில் போதிய இடம் இல்லாததால் சிப்காட் அமைக்க இயலவில்லை. யாரெனும் வாடகைக்கு இடம் பிடித்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் நிறுவனம் அமைத்தால் அதற்கு நான் அறக்கட்டளை மூலம் ரூ. 5 கோடி தருகிறேன்.

தொகுதியில் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றிய பின் உங்களைச் சந்தித்து வாக்குகள் கேட்கிறேன்.

நமது தமிழக முதல்வரின் திறமை மற்றும் திட்டமிடல் ஆகியவற்றால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இலவசங்கள் மக்களைக் கெடுக்கவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தியுள்ளன என்றாா் அவா்.

கூட்டத்தில் திருமயம் முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம், திமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி, நகரச் செயலா் அ. அழகப்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் எஸ். ஜெயராமன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் வி. கிரிதரன், நகரத் தலைவா் எஸ். பழனியப்பன், இந்திய கம்யூ. ஒன்றிய செயலா் ஏனாதி ஏஎல். ராசு, சிபிஎம் ஒன்றியச் செயலா் என். பக்ரூதீன், விசிக மாவட்டச் செயலா் திலீபன் ராஜா, மதிமுக ஒன்றியச் செயலா் முத்து மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.