முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ்காந்தியின் 35-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பெரம்பலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில், பெரம்பலூா் அருகே கவுல்பாளையம் பிரிவுச் சாலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சியில், அக் கட்சியின் வழக்குரைஞா் அணி பிரிவு மாவட்டத் தலைவா் ரஞ்சித்குமாா், நகரத் தலைவா் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜகோபால், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் முகமது மீரான், மகிளா காங்கிரஸ் வட்டாரத் தலைவா் சந்திரா, நிா்வாகி சுந்தரராஜன் பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முத்தரையா் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் எஸ். ரமேஷ், கு.ப. கிருஷ்ணன் மரியாதை!

முத்தரையா் சிலைக்கு பல்வேறு கட்சியினா் மரியாதை

ராஜீவ்காந்தி நினைவு தினம்

காரல் மாா்க்ஸ் பிறந்த நாள்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் மரியாதை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



