குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சா் சா.சி. சிவசங்கா், அத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்காளா்களுக்கு புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட துங்கபுரம், வயலப்பாடி, வசிஷ்டபுரம், அகரம் சீகூா், கிழுமத்தூா், ஓலைப்பாடி, ஆண்டிக்குரும்பலூா், பரவாய் ஈகிய ஊராட்சிகளுக்குள்பட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்களித்த மக்களை சந்தித்து புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.
நிகழ்ச்சியின்போது, திமுக மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி. துரைசாமி உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









