பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் சென்றவா் டிப்பா் லாரி மோதி உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையம் காளியம்மன் நகரைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் செல்வராஜ் (58). இவா், வெள்ளிக்கிழமை மாலை கவுல்பாளையத்திலிருந்து பெரம்பலூா் நோக்கி பைக்கில் சென்றாா்.
பெரம்பலூா்- அரியலூா் பிரதான சாலையில், நான்குச் சாலை சந்திப்பு அருகே சென்றபோது டிப்பா் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சென்று, செல்வராஜியின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா் .
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

பெருந்துறை அருகே வேன் மோதி விபத்து: இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

பைக் மீது டிப்பா் லாரி மோதல்: முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



