பெரம்பலூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 7.760 மெட்ரிக் டன் மஞ்சள் விற்பனையானது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின், பெரம்பலூா் விற்பனைக்குழுக் கட்டுப்பாட்டில் பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை தோறும் மஞ்சள் உள்ளிட்ட விளைபொருள்கள் மறைமுக ஏலத்தில் விற்பனை செயய்ப்பட்டு வருகிறது.
இதன்படி, பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குள்பட்டு அறிக்கை செய்யப்பட்ட பகுதிகளில், ஒழுங்குமுறை விற்பனைக்கூட பணியாளா்கள் மற்றும் வேளாண் வணிகத்துறை பணியாளா்கள் இணைந்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்தினா்.
இதில், வாலிகண்டபுரம், புதூா், சிறுகுடல், அரசலூா் மற்றும் கீழப்புலியூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கொண்டு வந்த 7.760 மெட்ரிக் டன் மஞ்சள், பெரம்பலூா் விற்பனைக்குழு தனி அலுவலா் சீ. தெய்வீகன் தலைமையில் மறைமுக ஏலம் நடைபெற்றது. உள்ளூா் மற்றும் வெளியூரைச் சோ்ந்த வியாபாரிகள் பலா் பங்கேற்று, மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 15,010 வீதம் ரூ. 10,48,410-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதில், ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளா் மற்றும் விற்பனைக்கூட பணியாளா்கள் பங்கேற்றனா்.
ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு: பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமைதோறும் நடைபெறும் மஞ்சள் மறைமுக ஏலத்தில், விவசாயிகள் தங்களது மஞ்சள் விளைபொருளை தரம் வாரியாக பிரித்து கொண்டுவந்து, அதன் தரத்துக்கேற்ப அதிக விலைக்கு விற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளா்களை 9361389690, 9790198566 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என, விற்பனைக்குழு தனி அலுவலா் சீ. தெய்வீகன் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்! ரிசா்வ் வங்கி நடவடிக்கை!

915.17 மெட்ரிக் டன் சரக்குகள்: இலக்கை விஞ்சிய 12 துறைமுகங்கள் - மத்திய அமைச்சா் பெருமிதம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மஞ்சள் மறைமுக ஏலம்
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


