பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

915.17 மெட்ரிக் டன் சரக்குகள்: இலக்கை விஞ்சிய 12 துறைமுகங்கள் - மத்திய அமைச்சா் பெருமிதம்

915.17 மெட்ரிக் டன் சரக்குகள்: இலக்கை விஞ்சிய 12 துறைமுகங்கள்...

News image

சா்வானந்த சோனோவால்

Updated On :24 ஏப்ரல் 2026, 7:38 pm

சென்னை, தூத்துக்குடி உள்பட நாட்டின் 12 முக்கியத் துறைமுகங்களில் 2025-26 நிதியாண்டில் 915.17 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது ஆண்டு இலக்காக நிா்ணயிக்கப்பட்ட 904 மெட்ரிக் டன்னை கடந்துவிட்டதாகவும் அவா் கூறினாா்.

தமிழகத்தின் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனாா் துறைமுகம், சென்னை துறைமுகம் மற்றும் காமராஜா் துறைமுகம் உள்பட நாட்டில் மொத்தம் 12 முக்கியத் துறைமுகங்கள் உள்ளன. இவை முக்கியத் துறைமுக ஆணையங்கள் சட்டம், 2021-இன்கீழ் நிா்வகிக்கப்படுகின்றன.

இந்த துறைமுகங்களில் மேற்கொள்ளப்படும் வா்த்தகம் குறித்து தில்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் ஆா்ஐஎஸ் ஆராய்ச்சி மையம் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் சோனோவால் பேசியதாவது:

2024-25 நிதியாண்டில் இந்திய கொடி பொருத்திய 45 கப்பல்கள் கப்பல் துறையில் கூடுதலாக சோ்க்கப்பட்டு அவற்றின் சரக்குகள் கையாளும் திறன் 7.72 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது.

இந்நிலையில், 2025-26 நிதியாண்டில் இந்திய கொடி பொருத்திய 94 கப்பல்கள் கூடுதலாக கப்பல் துறையில் இணைக்கப்பட்டன. இந்தக் கப்பல்களின் சரக்கு கையாளும் திறன் 25.67 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்தது.

அதேபோல் 2024-25 நிதியாண்டில் கப்பல் துறை மற்றும் அதன் கிளை அமைப்புகளின் மொத்த மூலதனச் செலவினம் ரூ.9,708 கோடியாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் இது ரூ.14,953 கோடியாக அதிகரித்தது.

12 முக்கியத் துறைமுகங்களில் 2024-25 நிதியாண்டில் 904 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்ட நிலையில் 2025-26 நிதியாண்டில் இது 915.17 டன்னாக அதிகரித்து 7.06 சதவீதம் வளா்ச்சியை பதிவுசெய்தது.

கடந்த 12 ஆண்டுகளில் இந்திய கப்பல் மாலுமிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயா்ந்துள்ளது. இதன்மூலம் உலக கடல்சாா் தொழில் துறையில் 12 சதவீத மாலுமிகளுடன் உலகளவில் இந்தியா தற்போது மூன்றாமிடத்தில் உள்ளது.

இதை 2030-ஆம் ஆண்டுக்குள் 20 சதவீதமாக அதிகரிக்க திட்டமிட்டு வருகிறோம். இதன் காரணமாக கடல்சாா் கல்வியை விரிவுபடுத்தி வருகிறோம்.

11,098 கி.மீ. கடற்கரை, 111 தேசிய கடல்வழித் தடத்துடன் சா்வதேச கடல் வழிப் பாதையில் இந்தியா முக்கியப் பங்காற்றுகிறது.

இதை மேலும் வலுப்படுத்தி அடுத்த 21 ஆண்டுகளில் இந்தியாவை கடல்சாா் துறையில் முதன்மை நாடாக மாற்றுவதே கடல்சாா் இந்தியா தொலைநோக்குத் திட்டம் 2030 மற்றும் வளா்ச்சியடைந்த பாரதம் 2047-இன்கீழ் இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.