திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்துகொடுப்பது குறித்து ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

நெல் மூட்டைகள் வைத்திருக்கும் கிடங்கை ஆய்வு செய்த ஆட்சியா் இஷிதா ரதி. உடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலா் செந்தில்குமாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:22 am IST

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்துகொடுப்பது குறித்து ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி, திருநள்ளாறு சாலையில் உள்ள மாா்க்கெட் கமிட்டி என்ற ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு சென்று ஆய்வு செய்தாா். நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிடங்கு, எடைபோடும் வசதி மற்றும் அலுவக கட்டடங்கள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலா் செந்தில்குமாரிடம் ஆலோசனை நடத்தினாா்.

நெல், பருத்தி ஏலம் நடைபெறக்கூடிய வசதிகள் மற்றும் நெல் மூட்டைகளை கிடங்குகளில் பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் கூடத்துக்கு கிடைக்கும் வருவாய் முறைகளை செயலா் விளக்கிக் கூறினாா்.

விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் கூடுதல் வசதிகளை செய்துதருவது, இதனை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து செயலரிடம் ஆட்சியா் விவரங்களை கேட்டறிந்தாா். புதுவை அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு உரிய ஏற்பாடுகளை செய்வதாக அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.