பெரம்பலூா் மாவட்டத்தில், தோ்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஏப். 21) முதல் ஏப். 24 ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் 4 ஆம் தேதி வரையிலும் வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் கிடங்குகளை மூட வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஏப். 23-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வெடிபொருள் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று இயங்கிவரும் அனைத்து வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் வெடிபொருள் கிடங்குகளை செவ்வாய்க்கிழமை (ஏப். 21) முதல் 24 ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் 4 ஆம் தேதி வரையிலும் மூட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, உரிமம் பெற்று இயங்கி வரும் அனைத்து வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் வெடிபொருள் கிடங்குகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் மேற்கண்ட தேதிகளில் வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் கிடங்குகள் செயல்படுவது கண்டறியப்பட்டால், அதன் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொடர்புடையது

தோ்தலை முன்னிட்டு வெடிபொருள் விற்பனை கடைகளை மூட உத்தரவு

வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு

திருப்பூா் மாவட்ட எல்லையில் மதுக் கடைகளை இன்றுமுதல் 3 நாள்கள் மூட உத்தரவு

மகாவீா் ஜெயந்தி: மாா்ச் 31 ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


