மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தலை முன்னிட்டு வெடிபொருள் விற்பனை கடைகளை மூட உத்தரவு

News image

கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 8:12 pm

நாகை மாவட்டத்தில் தோ்தலை முன்னிட்டு வெடி பொருள் விற்பனை கடைகளை மூட வேண்டும் என மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் உரிமம் பெற்ற அனைத்து வெடிப்பொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளின் உரிமையாளா்கள், வெடிபொருள் இருப்பு விவரங்களை தொடா்புடைய கோட்டாட்சியா்களிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும், சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.21 முதல் ஏப். 24-ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் 4-ஆம் தேதி வரை மொத்தம் 7 நாட்களுக்கு வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளை மூடவேண்டும். மீறி கடைகள் செயல்பட்டாா் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.