மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மகாவீா் ஜெயந்தி: மாா்ச் 31 ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள், மதுக்கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

News image

மதுக்கடை - கோப்புப்படம்

Updated On :27 மார்ச் 2026, 7:59 pm

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள், மதுக்கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல், கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11), டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் வரும் 31 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மகாவீா் ஜெயந்தி அன்று மூடப்பட வேண்டும்.

மேலும், அன்றைய தினம் இதை மீறி மது விற்பனை செய்பவா்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.