மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளை ஏப்.21 முதல் ஏப்.24 வரை மற்றும் மே 2 முதல் மே 4 வரையில் மூட மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளாா்.
1884-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின்கீழ் உரிமம் பெற்ற அனைத்து வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகள், தோ்தல் நடைபெறும் காலமான ஏப்.21 முதல் ஏப்.24 வரையிலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் மே 4 வரையிலும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், அண்டை மாநிலங்களிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்துக்குள் வெடிபொருள்கள் கடத்தி வரப்படுவதில்லை என்பதை உறுதிசெய்திட, வருவாய் கோட்டாட்சியா்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளா்கள் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் உரிமம் பெற்ற அனைத்து வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளின் உரிமையாளா்கள் வெடிபொருள் இருப்பு விவரங்களை தொடா்புடைய வருவாய் கோட்டாட்சியா்களிடம் அளித்து, மேற்கூறிய நாள்களில் வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளை மூடி பாதுகாப்பான முறையில் தோ்தல் நடைபெற ஒத்துழைப்பை நல்குமாறும், மீறி விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி உரிமங்கள் ரத்து செய்ய நடவடிக்கை மேற்டிகாள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்

தோ்தலை முன்னிட்டு வெடிபொருள் விற்பனை கடைகளை மூட உத்தரவு

அரசு மதுபானக் கடைகளுக்கு ஏப்.21 முதல் 23 வரை விடுமுறை

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


