மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பூா் மாவட்ட எல்லையில் மதுக் கடைகளை இன்றுமுதல் 3 நாள்கள் மூட உத்தரவு

News image

மது விற்பனைக்குத் தடை - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 6:38 pm

கேரள சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் அம்மாநில எல்லையை ஒட்டி செயல்படும் மதுபானக் கடைகளை செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 3 நாள்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள மாநில சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் அம்மாநில எல்லையை ஒட்டி செயல்பட்டு வரும் மதுபானக் கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவற்றை ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தவறும்பட்சத்தில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.