தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கரூரில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

News image

தெற்கு ரயில்வேயின் சென்னை அணியுடன் வியாக்கிழமை மோதிய வடகிழக்கு ரயில்வே கொல்கத்தா அணி வீராங்கனைகள்.

Updated On :22 மே 2026, 5:09 am IST

கரூரில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

கரூரில் அகில இந்திய அளவிலான எல்ஆா்ஜி நாயுடு நினைவு ஆண்கள் கூடைப்பந்து போட்டி 66-வது ஆண்டாகவும், கரூா் வைஸ்யா வங்கி சாா்பில் 12-ம் ஆண்டாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் வியாழக்கிழமை மாலை தொடங்கின. கரூா் கூடைப்பந்து குழுத் தலைவா் வி.என்.சி. பாஸ்கா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் ஆடிட்டா் சண்முகசுந்தரம், இந்திரமூா்த்தி, பாலசுப்ரமணியன், பொருளாளா் பெரியசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

வரும் 26-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெறும் போட்டியை கரூா் மாநகராட்சி ஆணையா் சுதா தொடக்கி வைத்தாா். நாக் அவுட் முறையில் நடைபெறும் முதல் நாள் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் தெற்கு ரயில்வேயின் சென்னை அணி வீராங்கனைகள் 72-53 என்ற புள்ளிகள் கணக்கில் கொல்கத்தா அணியை வீழ்த்தினா். தொடா்ந்து போட்டிகள் நடக்கின்றன.

இறுதிப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் ஆண்கள் அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.1லட்சம் மற்றும் சுழற்கோப்பை, இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.80,000 மற்றும் கோப்பை, மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60,000 மற்றும் கோப்பை, நான்காமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50,000 மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது.

இதேபோல பெண்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு முதல் பரிசாக ரூ.75,000 மற்றும் கோப்பை, இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.40,000 மற்றும் கோப்பை, மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30,000 மற்றும் கோப்பை, நான்காமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20,000 மற்றும் கோப்பையும் வழங்கப்படுகிறது. செயலா் கமாலுதீன் வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.