கரூர், மே12: கரூரில் பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகே செயல்பட்டு வந்த இரு மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
தமிழ்நாடு முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றதும் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்படும் 717 டாஸ்மாக் கடைகளை மூட செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
அதன்படி கரூரில் மக்கள் பாதை மற்றும் கோவை சாலையில் எல்பிஜி பெட்ரோல் நிலையம் எதிரே செயல்பட்டு வந்த இரு மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாளர் கூறிவதாவது:
”ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் கலால் விதிமுறை சட்டத்தின் படி கரூர் மாநகர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே 50 மீட்டர் தொலைவிற்கு அப்பால் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. மேலும் ஊரகப் பகுதிகளில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகே 100 மீட்டர் தொலைவில் மட்டுமே மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.
தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகே செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதையொட்டி கரூரில் மக்கள் பாதை மற்றும் கோவை சாலையில் உள்ள மது கடை என இரு மதுக்கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன.
மேலும் மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே செயல்படும் டாஸ்மாக் கடைகளை கண்டறிந்து அவற்றையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் அவர்.
Summary
Two Liquor Shops near Schools and worship places closed in Karur!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: கரூர் மாவட்டத்தில் 92.21% தேர்ச்சி

வாழப்பாடி, பேளூரில் 3 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

கரூரில் பள்ளி, வழிபாட்டு தலங்களுக்கு அருகே இருந்த 2 மதுக்கடைகள் மூடல்

முதல்வா் உத்தரவு எதிரொலி: அரக்கோணத்தில் 2 மதுக்கடைகள் மூடல்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



