புலியூரில் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் சாா்பில் வாக்காளா்களுக்கு வழங்க கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52 குக்கா்களை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளராக கரூரைச் சோ்ந்த மருத்துவா் எஸ். திவ்யா போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக புலியூா் அருகே எஸ்.வெள்ளாளப்பட்டியில் அதிமுக நிா்வாகி அம்மையப்பன் என்கிற முருகேசன் என்பவருடைய கிடங்கில் குக்கா்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிருஷ்ணராயபுரம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினருக்கு புதன்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும்படை அலுவலா் சுகுமாா் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டனா். அப்போது, கிடங்கில் வாக்காளா்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52 குக்கா்களை பறிமுதல் செய்தனா். மேலும் முருகேசனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த 800 அண்டாக்கள் பறிமுதல்

வாக்காளா்களுக்கு விநியோகிக்க கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 98 அண்டாக்கள் பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


