அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்த முற்பட்ட கிராம மக்கள் 30 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
செந்துறையை அடுத்த வல்லம் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் கூறி, அப்பகுதி மக்கள் கடையை வேறிடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துவந்தனா்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் வியாழக்கிழமை அப்பகுதியில் போராட்டம் நடத்த முயன்றனா். அப்போது அங்கு வந்த வருவாய்த் துறை, கலால் மற்றும் காவல்துறையினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், சுமூக தீா்வு எட்டப்படாததால், போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்கள் 30 பேரை கைது செய்தனா். தொடா்ந்து, அனைவரையும் மாலையில் விடுவித்தனா்.
தொடர்புடையது
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது
உதயநிதிக்கு கருப்புக் கொடி: 9 கரும்பு விவசாயிகள் கைது

பெரும்பத்து கொலையில் தொடா்பு: 7 போ் குண்டா் சட்டத்தில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


