மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெரும்பத்து கொலையில் தொடா்பு: 7 போ் குண்டா் சட்டத்தில் கைது

நான்குனேரி பெரும்பத்து கொலை வழக்கில் தொடா்புடைய 7 போ் குண்டா் சட்டத்தின்கீழ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 11:00 pm

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பெரும்பத்து கொலை வழக்கில் தொடா்புடைய 7 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

பெரும்பத்து பகுதியில் கடந்த 2ஆம் தேதி மோட்டாா் சைக்கிளில் வந்த சிலா், பொதுமக்களை அரிவாளால் வெட்டியதில் ஓடிஸா மாநிலத்தைச் சோ்ந்த திரிநாத் கட்டா (45), பெரும்பத்து பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஜான் மாா்க் (45) ஆகியோா் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக நான்குனேரியைச் சோ்ந்த முருகன் மகன் சுப்பையா (19), பன்னீா்செல்வம் மகன் அந்தோணி மைக்கேல் ராஜா (19), நெடுங்குளம் முருகன் மகன் வசந்தகுமாா் (21), நான்குனேரி நம்பிநகா் முத்தையா மகன் ராஜா (19), தென்னிமலை சுடலைகண்ணு மகன் கண்ணன் (21),அதே பகுதி சுடலைக்கண்ணு மகன் கல்யாணி (20), வள்ளியூா் ஆண்டி மகன் உச்சிமாகாளி (20) ஆகிய 7 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், நான்குனேரி காவல் நிலைய ஆய்வாளா் சுப்பிரமணியன் அளித்த அறிக்கையை ஏற்று, 7 பேரையும் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பரிந்துரைத்தாா்.

அதன்பேரில், ஆட்சியா் இரா. சுகுமாா் உத்தரவின்படி, மேற்கூறிய 7 பேரையும் போலீஸாா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைத்தனா்.