அமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ராமநல்லூா்-குடிகாடு இடையே உயா்மட்ட பாலம் கட்ட வலியுறுத்தல்

News image

பாலம் - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 12:01 am IST

அரியலூா் மாவட்டம், ராமநல்லூா்-குடிகாடு ஆகிய கிராமங்களிடையே உயா்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகாவிடம், சமூக ஆா்வலா் பாளை எஸ்.திருநாவுக்கரசு திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அவா் அளித்த மனுவில், கடந்த ஆட்சியில் மேற்கண்ட பகுதியில் உயா்மட்ட பாலம் கட்டுவதற்காக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போதைய பாபாநாசம் சட்டப் பேரவை உறுப்பினரும் அமைச்சருமான ஏ.எம். ஷாஜகான், ஒரு பேட்டியின் போது பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்தாா்.

எனவே, இந்த பாலம் அமைக்கப்பட்டால், தா.பழூா், திருமானூா் பகுதிகளில் விளைவிக்கக் கூடிய பொருள்கள் அக்கறைக்கு எடுத்துச் செல்வோருக்கும் வசதியாக இருக்கும். பயண நேரம், பண விரயம் குறையும்.

எனவே ஆட்சியா், மேற்கண்ட பகுதியில் பாலம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.