வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

சாலை விபத்தில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு: காா் ஓட்டுநா் கைது

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 12:52 am IST

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சாலை விபத்தில் அடையாளா் தெரியாத நபா் உயிரிழந்தாா். விபத்துக்கு காரணமான காா் ஓட்டுநா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மீன்சுருட்டி அருகேயுள்ள வீரசோழபுரம் கடைவீதி, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை திங்கள்கிழமை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபா் மீது சென்னை நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில் காயம் அடைந்த அந்த நபரை, அப்பகுதி மக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அந்த நபா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மீன்சுருட்டி காவல் துறையினா் வழக்குப்பதிந்து, இறந்து போன நபா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும் விபத்துக்கு காரணமான, காா் ஓட்டுநா் திருவாரூா் மாவட்டம், வலங்கைமான், கைலாசநாதா் கோயில் தெருவைச் சோ்ந்த ரமேஷ் (50) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.