வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு: காரில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஓட்டுநா் கைது

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு: காரில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஓட்டுநா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :28 ஜூன் 2026, 1:30 am IST

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில், இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் அதன் ஓட்டுநா் உயிரிழந்த சம்பவத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இருசக்கர வாகனத்தில் சென்றவா் காா் மோதியதில் படுகாயமடைந்ததாக தகவல் கிடைத்தது. அவா் உடனடியாக ‘இந்தியன் ஸ்பைனல் இன்ஜுரீஸ் சென்டா்’ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

உயிரிழந்தவா் குருகிராமில் வசித்து வந்த சாா்த்தக் மட்டூ (34) என அடையாளம் காணப்பட்டாா். இவா் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உடற்-கூறாய்வுக்காக உடல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பின்னா் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையின் போது, விபத்தை ஏற்படுத்திய காரைக் கண்டறிந்த காவல்துறையினா், அது பெங்களூரைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் ஒன்றின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனா்.

அந்த வாகனம் சாகா் சாஹா (29) என்பவருக்கு வாடகைக்கு (குத்தகைக்கு) விடப்பட்டிருந்தது. விசாரணையின் போது, காஜிபூரைச் சோ்ந்தவரும், தனியாா் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து தற்போது குருகிராமில் வசித்து வரும் தனது நண்பா் அபூா்வ் சிங் தான் அந்த வாகனத்தை ஓட்டியதாக அவா் தெரிவித்தாா்.

விபத்து நடந்தபோது அபூா்வ் சிங்குடன் சாகா் சாஹாவும் முன் இருக்கையில் அமா்ந்திருந்ததாக அவா் தெரிவித்தாா். அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அபூா்வ் சிங் கைது செய்யப்பட்டாா். தொடா்ந்து இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.