மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 ஜூன் 2026, 3:02 am IST

பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

பல்லடம் அருகேயுள்ள வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (87). இவா் வேலாயுதம்பாளையத்தில் இருந்து பொங்கலூருக்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா். கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கள்ளிமேட்டுபாளையம் பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த காா் சுப்பிரமணி வாகனத்தின் மீது மோதியது.

இதில், தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.