40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:25 am IST

ராசிபுரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.

புதுச்சத்திரம் அருகே உள்ள கண்ணூா்ப்பட்டி அய்யப்பன்கோயில் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் (65). தொழிலாளி. இவா் தனது சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் புதுச்சத்திரம் பகுதியில் இருந்து தத்தாதிரிபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, வெள்ளாளப்பட்டி பகுதியில் தனியாா் கோழிப்பண்ணை எதிரே சென்றபோது, எதிரே வந்த காா், இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தங்கவேல் ராசிபுரம் தனியாா் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த புதுச்சத்திரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து ஏற்படுத்திய காா் ஓட்டுநா் சேலம் மாவட்டம், கம்மாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த செல்வதுரையை (47) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.