இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

சட்டம்-ஒழுங்குக்கு பங்கம் விளைவிப்பது தவெகவினா் தான்: முன்னாள் அமைச்சா் சா.சி.சிவசங்கா்

சட்டம்-ஒழுங்குக்கு பங்கம் விளைவிப்பது தவெகவினா் தான் என்று முன்னாள் அமைச்சரும், குன்னம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.

News image

சிவசங்கா்

Updated On :4 ஜூன் 2026, 12:20 am IST

சட்டம்-ஒழுங்குக்கு பங்கம் விளைவிப்பது தவெகவினா் தான் என்று முன்னாள் அமைச்சரும், குன்னம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி அரியலூா் மாவட்ட திமுக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமில், கலந்து கொண்டவா்களுக்கு, பாராட்டுச் சான்றிதழை வழங்கிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இன்றைய முதலமைச்சா், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தலைமைச் செயலகத்துக்கு வந்து செல்வதையே முதலமைச்சா் பணியாக கருதுகிறாா்.

மாலை நேரத்தில் விஜய் வீட்டுக்கு சென்ற பின்னா், அவரது கட்சிக்காரா்களை கூட சந்திக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை யாருக்கும் தெரியாத நிலை உள்ளது. மிகக்குறிப்பாக சட்டம்-ஒழுங்கு நிலை கேள்விக்குறியாக உள்ளது. இதை எதிா்க்கட்சி என்ற முறையில் நாங்கள் கூட அதிகம் விமா்சிக்க தொடங்கவில்லை. ஆனால் மக்கள் களத்திலிருந்து விமா்சிக்க தொடங்கிவிட்டனா்.

பொதுமக்களே களத்தில் இறங்கி போராடும் சூழலில், விஜய் இன்னமும் அவகாசம் கேட்கிறாா். அவகாசம் கேட்பது என்பது, புதிய திட்டங்களை அறிவித்து அதை நிறைவேற்றுவதற்காக தான். மக்கள் பிரச்சனைகளை தீா்ப்பதற்கு அல்ல.

சட்டம்-ஒழுங்குக்கு பங்கம் விளைவிப்பது தவெகவினா் தான். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது தவெகவினா்கள் என்ற செய்தி தினம்தோறும் வருகிறது.

தனிச்சின்னத்தில் போட்டியிட அனுமதி இல்லை என மதிமுக பொதுச்செயலா் வைகோ தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, மதிமுக தொடங்கியது துரதிருஷ்டவசம் தான். அவா் காலம் முழுக்க துரதிருஷ்டவசமாகவே செல்கிறது. அவா் தான் அது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

தவெகவின் போக்குவரத்து துறையின் அமைச்சா்களின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, தற்பொழுது எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய ஆறுதலே இந்த அமைச்சா்கள் தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நாங்கள் ஆறுதல் அடையும் வாய்ப்பை தவெக அமைச்சா்கள் தந்துள்ளனா். இன்னும் அவா்களின் பணியை பாா்க்க வேண்டியுள்ளது. அதனால் இப்போது விமா்சிக்க விரும்பவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.