திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரியலூா் மாவட்டத்தில் இன்று முதல் கனரக வாகனங்கள் இயக்க நேரக் கட்டுப்பாடு

அரியலூா் மாவட்டத்தில் இன்று முதல் கனரக வாகனங்கள் இயக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :4 ஜூன் 2026, 12:16 am IST

அரியலூா் மாவட்டத்தில் இன்று முதல் கனரக வாகனங்கள் இயக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பள்ளிகளுக்கு ஆண்டு தோ்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டதால் ஜூன் 3-ஆம் தேதி வரை (தொடா் விடுமுறை) கனரக வாகனங்களின் இயக்க நேர கட்டுப்பாடு தளா்வு அமலில் இருந்தது.

விடுமுறை புதன்கிழமையுடன் முடிந்து வியாழக்கிழமை (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இதையொட்டி இன்று முதல் கனரக வாகனங்கள் இயக்க நேர கட்டுப்பாடு மீண்டும் செயல்பாட்டுக்கு வருகின்றன.

அரியலூா் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி, மாவட்டத்தில் பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கனரக வாகனங்களை தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் சாலைகளில் இயக்க தடையானது மீண்டும் அமலுக்கு வந்தது.

கனரக வாகன ஓட்டுநா்கள் வாகன இயக்க நேர கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்றி பாதுகாப்பாக இயக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.