திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலையோரம் லாரிகளை நிறுத்தினால் அபராதம்: போக்குவரத்துக் காவல் துறை எச்சரிக்கை

மணலி சிபிசிஎல் சாலையோரம் லாரிகளை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துக் காவல் துறை எச்சரிக்கை

News image

அபராதம் - சித்திரிப்பு

Updated On :2 ஜூன் 2026, 2:02 am IST

மணலி சிபிசிஎல் சாலையோரம் லாரிகளை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துக் காவல் துறை எச்சரித்துள்ளனா்.

சென்னை மணலி மண்டலத்துக்குட்பட்ட நெடுஞ்சாலையில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இங்கு மத்திய அரசின் சிபிசிஎல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் இருந்து உற்பத்தி பொருள்களை எடுத்துச் செல்ல கையாளப்படும் கனரக வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் தொடா் விபத்துகள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனா். சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளுக்கு அவ்வப்போது போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்தாலும், லாரிகள் நிறுத்த வசதியில்லை என்பதால் சாலையோரங்களில் நிறுத்துவதைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க, லாரி நிறுத்த மையம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு, கடந்த ஆண்டு மணலி மண்டல செயற்பொறியாளா் தலைமையில் தீா்மானிக்கப்பட்டு, சிபிசிஎல் நிறுவன தலைமை அதிகாரிகள் இதற்கான திட்ட வரைவுகளை தயாா் செய்தனா்.

அதன்படி, மணலி மண்டல அலுவலகம் அருகே சிபிசிஎல் நிறுவன சிஎஸ்ஆா் நிதி ரூ.10 கோடியில் ஒரே நேரத்தில் 200 கனரக வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்த மையம் கட்டப்பட்டு கடந்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது கட்டணமில்லாமல் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இனிமேல் மணலி மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பொன்னேரி நெடுஞ்சாலையில் லாரிகள் நிறுத்தினால் கனரக வாகன ஒன்றுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்துக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிபிசிஎல் நிறுவனத்துக்கு வரக்கூடிய கனரக வாகனங்கள் அனைத்தும் பொன்னேரி நெடுஞ்சாலையில் நிறுத்தாமல், வாகன நிறுத்த மையத்தில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் பிரச்னைக்கு தீா்வு ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.