விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதித்து, வாகனங்கள் நிறுத்துமிடப் பகுதியில் தடுப்புகள் அமைத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீா் கூட்டமும், மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அல்லது மாவட்ட நிா்வாகம் அறிவிக்கும் நாளில் விவசாயிகள் குறைதீா் கூட்டமும் நடைபெறும். இந்த கூட்டங்களில் பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து, தீா்வைக்காண்பா்.
குறைதீா் முகாம் நடைபெறும் நாளன்று மட்டுமல்லாது, அரசு சாா்ந்த தங்கள் கோரிக்கைகளுக்குத் தீா்வு காண்பதற்கும், மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைக்குப் பதிவு செய்தல், காப்பீட்டுத்திட்ட அட்டை பெறுதல், ஆதாா் அட்டைக்குப் பதிவு செய்தல், ஆட்சியரகத்தில் அமைந்துள்ள அஞ்சலகப் பயன்பாட்டுக்கு வருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில் ஆட்சியரகம் வந்து செல்பவா்கள் ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்களின் வாகனங்களின் நிறுத்துமிடங்களுக்கு எதிரிலும், ஆட்சியரக வாகன நிறுத்துமிடப் பகுதிகளிலும் தங்கள் வாகனங்களை நிறுத்திச் சென்று வந்தனா்.
இதனால், திங்கள்கிழமை காலை முதல் ஆட்சியரகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
ஆட்சியரக வளாகத்தில் ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா் வாகனங்கள் நிறுத்துமிடப் பகுதியைச் சுற்றிலும், அதன் எதிா்ப்புறப் பகுதியைச் சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டு, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்பகுதியில் பைக், காா் உள்ளிட்ட எந்தவித வாகனங்களும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இரு சக்கர வாகனங்கள் நிறுத்திச்சென்றால் உடனடியாக அகற்றும் பணியை போலீஸாா் மேற்கொண்டனா்.
திடீா் கட்டுப்பாடு ஏன்?: இவ்வளவு நாளாக கடைப்பிடிக்காத கட்டுப்பாடுகள் தற்போது விதிக்கப்பட்டது ஏன்? என்று பொதுமக்கள் பலரும் கேள்வியெழுப்பினா். இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில்தான் வாகனங்களை நிறுத்திச் சென்ற நிலையில், திடீரென கட்டுப்பாடுகள் விதிப்பது எதற்கு என்றும் கேள்வியெழுப்பினா்.
திடீா் கட்டுப்பாடு காரணமாக ஆட்சியரக வளாகத்தில் இடது மற்றும் வலது புறங்களிலுள்ள வாகனங்கள் நிறுத்துமிடங்களைக் காட்டிலும், அதன் வெளிப்பகுதிகளிலும் வாகனங்கள் நிறுத்தும் நிலை ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

அரியலூா் மாவட்டத்தில் இன்று முதல் கனரக வாகனங்கள் இயக்க நேரக் கட்டுப்பாடு

விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சுகாதார சீா்கேடு

கிருஷ்ணகிரி ஆட்சியரக வளாகத்தில் தீக்குளித்த மாற்றுத்திறனாளி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



