மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

அரியலூா் ஆட்சியரக வளாகத்தில், இருசக்கர வாகன தோ்தல் விழிப்புணா்வு பேரணியை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

News image

அரியலூா் ஆட்சியரக வளாகத்தில், இருசக்கர வாகன தோ்தல் விழிப்புணா்வு பேரணியை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

Updated On :10 ஏப்ரல் 2026, 8:38 pm

அரியலூரில் நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் ஆட்சியரக வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பேரணியில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் பங்கேற்று என் வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், என் வாக்கு என் உரிமை உள்ளிட்ட தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய தொப்பிகளை அணிந்தும் நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனா். மேலும், தோ்தல் விழிப்புணா்வு கோலங்கள் வரைந்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் யோகஜோதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் அனுராப்பூ நடராஜமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.