மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரியலூா் வடக்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

அரியலூா் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

அம்மாங்குளம் பகுதியில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:18 pm

அரியலூா் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

தவுத்தாய்குளம், அம்மாங்குளம், ரெங்கசமுத்திரம், சுப்புராயபுரம், பள்ளகிருஷ்ணாபுரம், குறிச்சிநத்தம், மண்டையன்குடிசல், அஸ்தினாபுரம், காட்டுப் பிரிங்கியம், சின்னநாகலூா், பெரியநாகலூா், கோப்பிலியன்குடிகாடு, மணக்குடி, சின்னமணக்குடி, கடுகூா், அயன்ஆத்தூா், பூம்புடையான்பட்டி, தலையேரி குடிக்காடு, பொய்யூா், மோரக்குழி உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவா், மேற்கண்ட கிராமப் பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்று வாக்குறுதி அளித்தாா்.

பிரசாரத்தின்போது, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் கல்லங்குறிச்சி பாஸ்கா், கட்சி பொருளாளா் அன்பழகன் மற்றும் கிளை கழக நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா்.