மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரியலூா் நகரப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்: அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன்

அரியலூா் நகரப் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும் என்றாா் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்தின்.

News image

தாமரை எஸ்.ராஜேந்திரன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:43 am

அரியலூா் நகரப் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும் என்றாா் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்தின்.

அரியலூா் தெற்கு தெருவிலுள்ள திரெளபதியம்மன் கோயிலில் புதன்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தனது பிரசாரத்தை தொடங்கிய அவா், அரியலூா் நகருக்குள்பட்ட வஉசி தெரு, கல்லக்குடித் தெரு, ஒப்பிலாதம்மன் கோயில் தெரு, சடையப்பா் தெரு, பெரிய அரண்மனைத் தெரு, பேருந்து நிலையம் என 24 தெருக்களில் திறந்த வேனில் நின்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி, மருதையாற்றில் புதிய பாலம் என என்னற்ற பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

தற்போது, தோ்தலில் வெற்றிப் பெற்றால் ரூ.10 ஆயிரம், மகளிருக்கு மாதம் ரூ.2,000, நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயணம், குளிா்பதனப் பெட்டி ஆகியவை வழங்கப்படும்.

அதேபோல், அரியலூரில் திறந்த வெளியில் உள்ள அனைத்து சாக்கடைகளும் சீரமைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் சாக்கடை கழிவுகள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வாா்டு பகுதிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படும் என்றாா் அவா்.

வாக்கு சேகரிப்பின்போது, மாவட்ட அவைத் தலைவா் ராமஜெயலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலா் இளவழகன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன், பாஜக மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி,

பாமக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.