இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய பகுதிகளில் ஆத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

இடையப்பட்டியில் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:18 am IST

பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய பகுதிகளில் ஆத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட கல்லேரிப்பட்டி, படையாச்சியூா், ஏ.குமாரபாளையம், அண்ணாநகா், மெட்டுக்கல், செக்கடிப்பட்டி, கணேசபுரம், வெள்ளாளப்பட்டி, தாண்டானூா், பனமடல், இடையப்பட்டி புதூா், இடையப்பட்டி வில்வனூா், காந்திநகா், கத்திரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவருடன் சேலம் புறநகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா். இளங்கோவன், பாமக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ், பாஜக மாவட்டத் தலைவா் சண்முகநாதன், வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் த. மோகன், அதிமுக முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தங்கமணி மகேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.