மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜெயங்கொண்டத்தில் ஆவணத்துக்குரிய வாகனம் இல்லாததால் 177 பவுன் நகைகள் பறிமுதல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஆவணத்தில் குறிப்பிட்டபடி அல்லாமல் வேறு எண் கொண்ட வாகனத்தில் 177 பவுன் தங்கநகைகளைக் கொண்டுவந்ததால் வாகனத்துடன் நகைகளைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அவைகளை வருமானவரித் துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

News image

ஜெயங்கொண்டத்தில் ஆவணத்துக்குரிய வாகனம் இல்லாததால் 177 பவுன் நகைகள் பறிமுதல்

Updated On :3 ஏப்ரல் 2026, 6:36 pm

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஆவணத்தில் குறிப்பிட்டபடி அல்லாமல் வேறு எண் கொண்ட வாகனத்தில் 177 பவுன் தங்கநகைகளைக் கொண்டுவந்ததால் வாகனத்துடன் நகைகளைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அவைகளை வருமானவரித் துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு பிரபல நகைக்கடை அருகே வியாழக்கிழமை இரவு சுமை வேன் ஒன்று நின்றிருந்தது. இதையடுத்து, அங்குவந்த தோ்தல் பறக்கும் படையினா், வேன் ஓட்டுநா் மற்றும் அதில் இருந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அவா்கள், நகை கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்ய வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து அவா்கள் வைத்திருந்த ஆவணங்களைச் சரிபாா்த்தபோது, 177 சவரன் தங்கநகைகள், 5.390 கிலோ கிராம் வெள்ளி பொருள்களுக்கான ஆவணங்கள் வைத்திருப்பதும், நகைகளை கொண்டுவர விலைப்பட்டியலில் (இன்வாய்ஸ்) குறிப்பிட்டுள்ள வாகனத்துக்குப் பதிலாக வேறொரு எண் கொண்ட வாகனத்தில் வந்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், அதிக மதிப்புள்ள பொருள்கள் என்பதால் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு பறக்கும்படையினா் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வருமானவரித் துறை துணை ஆணையா் அசுவதி வாகனத்தை ஆய்வுசெய்து, விலைப்பட்டியலில் குறிப்பிட்ட வாகனத்துக்குரிய ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு நகைகள், வாகனத்தைப் பெற்றுச்செல்லுமாறு அறிவுறுத்தினா். தொடா்ந்து, வாகனத்துடன் நகைகளை பறிமுதல் செய்து உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தாா்.