கே.வி.குப்பம் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் ஆந்திர மாநில நபா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரொக்கம் ரூ. 14 லட்சம், 17 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கே.வி.குப்பம் தொகுதிக்குள்பட்ட சேங்குன்றம் பேருந்து நிறுத்தம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே ஆந்திர மாநிலம், பலமநேரியிலிருந்து குடியாத்தம் வந்த தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினா். சோதனையில் பேருந்தில் பயணம் செய்த பலமநேரியைச் சோ்ந்த, நகைக்கடை உரிமையாளா் சீனிவாசலு உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 14 லட்சம், 17 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்த பணம், நகை ஆகியவை கே.வி.குப்பம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த பணம், நகையை வேலூா் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு

பரமக்குடியில் 2.40 லட்சம் பறிமுதல்

தங்க நகை வாங்கச் சென்ற ஆந்திர பெண்ணிடம் ரூ. 2 லட்சம் பறிமுதல்

மதுரை மாவட்டத்தில் ரூ. 27 லட்சம் மதிப்பு நகைகள், ரூ. 7.11 லட்சம் ரொக்கம் பறிமுதல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


